ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இணையத் தொடரில் நாயகனாக சூரி!

Published On :19 ஆகஸ்ட் 2024, 6:23 pm IST

நடிகர் சூரி இணையத் தொடரில் நாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து கருடன் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமானதால், கதைநாயகனாக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்க்கப்பட்ட சூரி, ஆக்சன் நடிகராகவும் வளர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அடுத்ததாக, இவர் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் ஆக.23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், சூரி கதையொன்றை எழுதி வருகிறாராம். மதுரை பின்னணியில் உருவாகும் இதனை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி இணையத் தொடராக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறையாக, இணையத் தொடரில் சூரி நாயகனாக அறிமுகமாகும் தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.