பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சூரியின் மண்டாடி பட வெளியீட்டுத் தேதி!

நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் “மண்டாடி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

actor soori

நடிகர் சூரி

Published On :

நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராகயிருந்த நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை” படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இப்படத்தில், நடிகர் சூரியின் நடிப்பு பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றதைத் தொடர்ந்து அவர் நாயகனாக நடித்த கருடன், மாமன் ஆகிய திரைப்படங்களும் பெருமளவில் கவனம் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “மண்டாடி”. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.

நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப்போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், ஸ்டன்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ள “மண்டாடி” திரைப்படம் வரும் செப். 4 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு இன்று (ஜூன் 11) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Summary

The release date of the movie "Mandaadi" starring actor Soori has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.