கேரள மாநில விருதுகள் 2024: ஊர்வசி, பிருத்விராஜுக்கு சிறந்த நடிப்புக்கான விருது!
கேரள அரசால் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகள் தற்போது அறிவிக்கபட்டுள்ளன.
இந்தாண்டு நடைபெறும் 54-வது கேரள மாநில திரைப்பட விருதுக்கு 160 திரைப்படங்கள் பல்வேறு பிரிவுக்குக் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதில், 84 படங்கள் புதுமுக இயக்குநர்களால் உருவானவை.
திருவனந்தபுரத்தில் கேரளத்தின் கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் இந்தாண்டுக்கான கேரளத்தின் மாநில விருதுகளை அறிவித்துள்ளார்.
இதில் சிறந்த நடிப்புக்காக ஊர்வசிக்கு (உள்ளொழுக்கு) பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்) கிடைத்துள்ளது.
சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்)
சிறந்த நடிகை - ஊர்வசி (உள்ளொழுக்கு)
சிறந்த படம் - காதல் தி கோர்.
சிறந்த இயக்குநர் - பிளெஸ்ஸி (ஆடுஜீவிதம்)
சிறந்த இரண்டாவது படம்: இரட்ட
சிறந்த துணை நடிகர் - விஜய்ராகவன் (பூக்காலம்)
சிறந்த அறிமுக இயக்குநர் - பஜில் ரஜாக் (தடவு)
சிறந்த இசை (பின்னணி இசை) - மேத்திவ் புலிக்கன் (காதல் தி கோர்)
சிறந்த இசை (பாடல்) - ஜஸ்டின் வர்கீஸ் (செந்தாமர சாவர்)
சிறந்தபாடல் - ஹரீஷ் மோகன் ( செந்தாமர சாவர்)
சிறந்த ஒளிப்பதிவு - சுனில் கே.எஸ்.
சிறந்த கதை - ஆதர்ஷ் சுகுமாரன் (காதல் தி கோர்)
சிறந்த சப்தம் - ஜெயதேவன் சக்காத், அனில் ராதாகிருஷ்ணன் (உள்ளொழுக்கு)
நடுவர் குழுவின் சிறப்பு விருது:
நடிப்பு - கிருஷ்ணன் (ஜைவம்), கே.ஆர்.கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு( காதல் தி கோர்), படம்- கங்காச்சாரி.
சிறந்த பெண் - ஷாலினி உஷா தேவி (என்னென்னும்)
சிறந்த விஷுவல் - 2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.