
நடிகர் அமீர் கான் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அமீர் கான் நடிப்பில் இறுதியாக வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் மிகப்பெரிய தோல்விப்படமானது. ஃபாரஸ்ட் கம்ப் (forest gump) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்தின் தோல்வி அமீர் கானை கடுமையாக பாதித்தது.
தற்போது, சித்தாரே ஸமீன் பார் (sitaare zameen par) என்கிற படத்தை தயாரித்து நடித்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - அமீர் கான் - மைத்ரி மூவிஸ் நிறுவனம் ஆகியோர் கூட்டணியில் புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து, கைதி - 2 படத்தை இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.