சிலம்பரசனுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்!

சிலம்பரசனின் புதிய திரைப்படம் குறித்து...
silambarasan and mrunal thakur
சிலம்பரசன், மிருணாள் தாக்கூர்
Updated on
1 min read

நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதையுடன் தொடர்புடைய கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது.

அடுத்ததாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு காட் ஆஃப் லவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

silambarasan and mrunal thakur
ஏமாற்றத்தைக் கொடுத்த ஜன நாயகன் வழக்கு தீர்ப்பு!
Summary

actor mrunal thakur might act with silambarasan in god of love movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com