கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரானவர் அர்ஜுன் தாஸ். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தும் கவனிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றையும் இணைத்து காதல் குறியீட்டுடன் காதலியை முகம் காட்டாமல் பதிவிட்டிருந்தார்.
கடைசியாக அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்கு பாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியுள்ளது.
சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நாயகியாக சிவாத்மிகா நடிக்கிறார். இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடிக்கிறார்.