தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

புஷ்பா- 2 ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000!

புஷ்பா- 2 குறித்து...

News image
Updated On :1 டிசம்பர் 2024, 8:06 am

புஷ்பா - 2 திரைப்படத்தின் டிக்கெட் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தின் டிரைலர் வெளியாகி இந்தியளவில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. புஷ்பா - 2 திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ளது.

வெளியீட்டுத் தேதியில் தயாரிப்பு நிறுவனம் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன்படி, டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்தே தெலங்கானாவில் புஷ்பா - 2 திரையிடப்படுகிறது. டிக்கெட் விலையாக ரூ. 1,120 - 1,240 வரை உயர்த்தியுள்ளனர்.

அதேநாளில் தமிழகத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

இந்த நிலையில், மும்பையிலுள்ள பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் புஷ்பா - 2 முதல் நாளுக்கான ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000 ஆக நிர்ணயம் செய்துள்ளனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி இப்படி டிக்கெட் விலையைக் கடுமையாக உயர்த்தியது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுவே, இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களிலே அதிக டிக்கெட் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.