டூரிஸ்ட் ஃபேமிலி: சசிகுமார்-சிம்ரன் நடிக்கும் புதிய படத் தலைப்பு
நடிகர் சசிகுமாரின் புதிய படத் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாளியுள்ளது.


நடிகர் சசிகுமாரின் புதிய படத் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாளியுள்ளது.
நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத் தலைப்பு குறித்த டீசர் இன்று வெளியாகியுள்ளது.
படத்துக்கு டூரிஸ்ட் ஃபேமிலி என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார்.
படத்தினை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தை குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
டீசரில் சசிகுமார்-சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் அடுத்த வருடம் திரைக்கு வருகிறது.
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தற்போது இயக்குநர் ராஜு முருகன், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...