ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

எஸ்கே - 25 படப்பிடிப்பு துவக்கம்!

எஸ்கே - 25 அப்டேட்...

Published On :

சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: ஜெயம் ரவி - 34 பூஜை!

இதைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தன் 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் தன் 25-வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது.

Story image

இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவிக்கு இடையேயான சில காட்சிகள் எடுக்கப்படுகிறதாம். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் எஸ்கே - 25 படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.