நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விஜய் சேதுபதியுடன் ரோஜா தொடர் நாயகன்! புதிய படமா?

ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன், நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

News image

விஜய் சேதுபதியுடன் சிபு சூர்யன் - இன்ஸ்டாகிராம்

Updated On :18 டிசம்பர் 2024, 5:43 pm IST

ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன், நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ரோஜா தொடர் முடிந்த பிறகு வேறு எந்தவொரு தொடர்களிலும் சிபு சூர்யன் நடிக்க ஒப்பந்தமாகாத நிலையில், விஜய் சேதுபதி உடனான புகைப்படத்தைப் பகிர்ந்ததால், அவருடன் படத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நாயகனாக நடித்தவர் சிபு சூர்யன். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். இவர்களுக்கு இடையிலான காட்சிகள் இளம் தலைமுறை ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

ரோஜா தொடர் 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பானது. அந்த காலகட்டத்தில் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்ததால், பலரின் கவனத்தையும் ரோஜா தொடர் ஈர்த்தது.

ரோஜா தொடருக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா -2 தொடரில் சிபு சூர்யன் நடித்தார். இந்தத் தொடர் விரைவிலேயே முடிவுக்கு வந்தது.

அடுத்தடுத்த வாய்ப்புகள்

அதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் வீரா தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வேறு எந்தவொரு தொடரில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிபு சூர்யன் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி உடனான புதிய படத்தில் சிபு சூர்யன் நடிக்கிறாரா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனினும் விடுதலை 2 படத்துக்கான புரமோஷன் பணிகளின்போது மேற்கொண்ட பயணத்தின்போது இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.