
விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. அதில் இருங்க பாய் என்ற வார்த்தை பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தவர்களின் மத்தியில் இருங்க பாய் என்ற வார்த்தை மிகவும் பிரபலம். அதை சாமர்த்தியமாக தனது பாடலில் உபயோகித்துள்ளார் அனிருத். அதனால் இந்தப் பாடம் உடனடியாக வைரலாகியுள்ளது.
பாடகர் அறிவு எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஆண்டனி தாசன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.
‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
பொங்கல் வெளியீடாக இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது. நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பை முடித்து கார் பந்தயத்திற்கு தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அனிருத் அடுத்ததாக விடி12, கூலி, தளபதி 69, எஸ்கே 23, எல்ஐகே ஆகிய படங்களுக்கு இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.