சந்தானம் நடித்து முடித்துள்ள புதிய திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். டி.ஜி. விஷ்வ பிரசாத்தின் பீபுள் மீடியா பேக்டரி இப்படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நாளை (பிப். 2) வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யூ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: இந்தியாவில் நடப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது: ஜியோ பேபி
இதில், நீக்கப்பட வேண்டிய வார்த்தைகளை தணிக்கை வாரியம் படக்குழுவுக்குக் கூறியிருக்கிறது. அதில், ‘மயிருல, பன்னிமூக்கா, பரங்கித் தலையன், ஒல்ட் மங்க், பாரத ரத்னகுமார் அவார்ட் மற்றும் ஒரு கெட்ட வார்த்தை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், ‘முக்கியமான சாமியைக் கூட காசு இருந்தால்தான் பாக்க முடியுது’ என்கிற வசனத்தையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள்.
சந்தானம் இதுவரை நாயகனாக நடித்த படங்களிலேயே இப்படம்தான் அதிக திரைகளில் வெளியாக உள்ளது. உலகளவில் 600 திரைகளாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பங்குனி மாதப் பலன்கள் - மிதுனம்

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
டிரம்ப் அச்சுறுத்தலை மீறி கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் முடிவு!

பங்குனி மாதப் பலன்கள் - கடகம்
வீடியோக்கள்

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

