எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

100 நாள்களைக் கொண்டாடிய சிங்கப் பெண்ணே தொடர்!

டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து சிங்கப் பெண்ணே தொடர் முதல் 5 இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 9:35 am

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர் 100 நாள்களைக் கடந்துள்ளது. இதனைக்  சிங்கப் பெண்ணே குழுவினர் கொண்டாடியுள்ளனர். சின்னத்திரை ரசிகர்கள் பலர் சிங்கப் பெண்ணே குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சிங்கப்பெண்ணெ தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய முதல் வாரத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு சிங்கப் பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அமல்ஜித், தர்ஷக் கெளடா ஆகியோர் நடிக்கின்றனர். 

சிங்கப் பெண்ணே நடிகர், நடிகைகள்

சிங்கப் பெண்ணே நடிகர், நடிகைகள்

கிராமத்தில் வளர்ந்த இளம் பெண் குடும்ப வறுமை காரணமாக நகரத்திற்கு வந்து சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து சிங்கப் பெண்ணே தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்தத் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே கயல், எதிர்நீச்சல் போன்ற முன்னணி தொடர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது. 

அதனைத் தொடர்ந்து பல வாரங்களில் டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து சிங்கப் பெண்ணே தொடர் முதல் 5 இடங்களில் ஒன்றாக இருக்கிறது. 

கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரை இயக்குகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.