
சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமடைந்த மெட்டி ஒலி தொடரின் 2 ஆம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டி ஒலி தொடர் 2002 ஆம் ஆண்டு முதல் 2005 வரை 811 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. கரோனா காலக்கட்டத்தில் இந்த தொடரின் மறுஒளிபரப்பையும் ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர்.
மெட்டி ஒலி தொடரை இயக்குநர் திருமுருகன் நடித்து இயக்கி இருந்தார். ஒரு தந்தை, அவருக்கு 5 மகள்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து படும் கஷ்டங்களைக் கொண்டு கதைக்களம் அமைந்திருக்கும். இந்த தொடர் 90களில் பிறந்தவர்களின் விருப்பமானதாக இருந்தது.
இந்த தொடரின் டைட்டில் பாடலான 'அம்மி அம்மி அம்மி மிதித்து' பாடல் மிகவும் பிரபலமானதாக இருந்தது. இந்தத் தொடரில் டில்லி குமார், காயத்ரி, சேத்தன், காவேரி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.
மெட்டி ஒலி தொடரின் 2 பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகினது. இத்தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மெட்டி ஒலி தொடரின் முதல் பாகத்தை இயக்கிய திருமுருகன் இரண்டாம் பாகத்தையும் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மெட்டி ஒலி தொடரின் இரண்டாம் பாகத்தை திருமுருகன் இயக்கப் போவதில்லை என்றும், மாற்றாக விக்ரமாதித்யன் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: 'பெண்கள் ஆடையில் ஸிப் எதற்கு...’ கயல் ஆனந்தியின் மங்கை டிரைலர்!
இயக்குநர் விக்ரமாதித்யன் மெட்டி ஒலி தொடரின் முதல் பாகத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.