தனுஷின் கேப்டன் மில்லர்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.


என்னதான் வாரந்தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நடிகர் தனுஷ் - இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம், அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் பிப்.9ஆம் தேதி வெளியாகிறது.
நடிகர் மகேஷ் பாபு, பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் குண்டூர் காரம். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப். 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
பரத்மோகன் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் நடித்துள்ள இப்படிக்கு காதல் திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடியில் பிப். 9 ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிக்க: தென்னிந்திய ஆலியா பட்: ரசிகர்களின் அன்பு மழையில் கன்னட நடிகை!
பபுல்கம் திரைப்படம் ஆஹா ஓடிடியில் பிப். 9-ல் வெளியாகிறது. மலையாளத்தில் ஜெய் மகேந்திரன் என்கிற வெப் தொடர் சோனி லைவ்வில் பிப். 9-ல் வெளியாகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...