பாக்கியலட்சுமி தொடரால் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு வந்த முன்னேற்றம்: இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 10  தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி தொடரால் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு வந்த முன்னேற்றம்: இந்த வார டிஆர்பி!

பாக்கியலட்சுமி  மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் இணைந்து ஒளிபரப்பப் பட்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் டிஆர்பியில் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை  ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை  டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 10  தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

சன் டிவியின் புதிய சீரியலான சிங்கப் பெண்ணே தொடர் 11.53 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கயல் சீரியல் 11.03 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

வானத்தைப் போல தொடர் 10.49 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது

எதிர் நீச்சல் சீரியல் 9.92 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

சுந்தரி சீரியல் 9.40 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 8.81  டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

இனியா தொடர் 7.93 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி மகா சங்கமத்திற்கு 7.19 டிஆர்பி புள்ளிகள் கிடைத்து 8-வது இடத்தில் உள்ளது.

ஆஹா கல்யாணம் தொடர் 6.54 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. கார்த்திகை தீபம் தொடர் 6.35 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

எப்போதும் போல சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. விஜய் டிவியை பொருத்தவரை சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தில்  உள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடர் டிஆர்பி பட்டியலில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com