தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மொய்தீன் பாயாக தலைவர்...: லால் சலாம் படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் லால் சலாம் படக்குழுவை பாராட்டி பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :10 பிப்ரவரி 2024, 5:06 am

DIN

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதால் வருகிற பிப்.9 ஆம் தேதி படம் வெளியாகிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தைப் பெற்றது. லால் சலாம் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

Story image

நேற்று படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிற நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “மொய்தீன் பாயாக தலைவரை லால் சலாம் படத்தில் பார்க்க விருந்தாக இருந்தது. ( தீ, இதயம் எமோஜிக்கள்). சிறப்பாக இயக்கியிருந்தீர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். உண்மைக் கதையை தழுவி மத நல்லிணக்கம் நமக்கிடையே தேவை  எனபதை சிறப்பாக கூறியிருந்தீர்கள். ஏ.ஆர்,.ரஹ்மான், விஷ்ணு விஷால், விக்ராந்த், லைகா புரடக்‌ஷனுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். 

கார்த்திக் சுப்புராஜ் தீவீரமான ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ரஜினியை வைத்து இயக்கிய பேட்ட திரைப்படம் மிகவும் ஸ்டைலான ரஜினி படங்களின் வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.