சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

எஸ்கே - 21 டீசர் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2024, 11:38 am

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம்  வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுது.

அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் பெயர் அறிவிப்பு டீசரைப் பார்த்த இயக்குநர் நெல்சன் படக்குழுவைப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் பெயர் டீசர் வருகிற பிப்.16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.