வேட்டையன் வெளியீடு எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வேட்டையன் வெளியீடு எப்போது?

ஜெயிலர், லால் சலாம் படத்தின் வெற்றியைதைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர். 

தூத்துக்குடி மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடந்த முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வேட்டையன் வெளியீடு எப்போது?
’மன்னித்துவிடுங்கள் அய்யா’ மணிகண்டனின் தேசிய விருதை திருப்பியளித்த திருடர்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com