தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பில்லா மறுவெளியீட்டுத் தேதி!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பில்லா திரைப்படம் மறுவெளியீடாக உள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 10:29 am

இயக்குநர் விஷ்னு வர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. தொடர்ந்து, அஜித் பில்லா - 2 படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. 

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் பில்லா திரைப்படத்தைத் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டிருந்தது. தற்போது, பிப்.23 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

ஆனந்தா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த டான் படத்தின் தழுவல் ஆகும். டான் படத்தை நடிகர் ரஜினிகாந்த் ‘பில்லா’ என ரீமேக் செய்திருந்தார். அஜித்தின் பில்லாவும் சில மாறுதல்களுடன் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.