மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பிரபல பாடகா் பங்கஜ் உத்ஹாஸ் மறைவு

பிரபல பாடகா் பங்கஜ் உத்ஹாஸ் மறைவு

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 8:15 pm

மும்பை: பிரபல பாடகரும், கஸல் கலைஞருமான பங்கஜ் உத்ஹாஸ் (72) உடல்நலக் குறைவால் திங்களகிழமை காலமானாா்.

கடந்த 1980-இல் அஹாத் என்ற கஸல் ஆல்பத்தை உருவாக்கி தனது பயணத்தை தொடங்கிய பங்கஜ் உத்ஹாஸ், மகேஷ் பட்டின் ‘நாம்’ திரைப்படத்தில் பிரபலமான சிட்டி ஆயி ஹை உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியவா். அவரது சிறந்த செயல்பாட்டுக்காக கடந்த 2006-இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா் மருத்துவமனையில் காலமானாா். அவருக்கு மனைவி ஃ பரீடா, மகள்கள் ரேவா, நயாப் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெறுகிறது.

பிரதமா் மோடி இரங்கல்:

பங்கஜ் உத்ஹாஸின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா்.