பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பணப்பெட்டி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொடர்ந்து 7-வது சீசனாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்த சீசன், 90 நாள்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில், விஷ்ணு, அர்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, பூர்ணிமா, விசித்ரா, விஜய் ஆகிய 8 பேரை தவிர பிற போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
‘டிக்கெட் டூ பைனல்’ டாஸ்கில் வெற்றி பெற்ற விஷ்ணுவை தவிர மற்ற 7 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் உள்ளனர்.
இந்த நிலையில், வழக்கம் போல் 14-வது வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும் பணப்பெட்டி இன்று பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்தில் தொடங்கி படிப்படியாக தொகை உயர்த்தப்படும். உள்ளே இருக்கும் 8 போட்டியாளர்களில் யாராவது விரும்பினால் பணப்பெட்டியில் இருக்கும் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம்.
இதையும் படிக்க | கேப்டன் மில்லர் டிரைலர் தேதி!
அவ்வாறு வெளியேறுபவர்களுக்கு சம்பளத்துடன் பணப்பெட்டியில் உள்ள தொகையும் வழங்கப்படும். இல்லையென்றால், வெற்றியாளரை தவிர மற்ற அனைவருக்கும் சம்பளம் மட்டுமே வழங்கப்படும்.
முந்தைய சீசன்களில் கேபிரில்லா, கவின், சிபி, கதிரவன், அமுதவாணன் உள்ளிட்டோர் பணப்பெட்டியுடன் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்

இந்த முறை சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அஜிங்க்யா ரஹானே
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

