கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கேப்டன் மில்லரை ஈழத்தமிழர்கள் கதையாக உருவாக்க நினைத்தேன்: இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

கேப்டன் மில்லர் படத்தினை ஈழத்தமிழர்கள் கதையாக எடுக்க நினைத்தேன் என அருண் மாதேஸ்வரன் கூறியுள்ளார். 

News image
Updated On :11 ஜனவரி 2024, 9:26 am

DIN

ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 17 வருடங்களாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர். 

தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

Story image

நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், “முதலில் கேப்டன் மில்லர் படத்தினை ஈழத்தமிழர்கள் கதையாக எடுக்க நினைத்தேன். ஆனால் அப்படி எடுத்தால் படத்தினை வெளியிட முடியாது. பல சிக்கல்கள் இருக்குமென்பதால் கதைக்களத்தினை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக இருக்குமாறு மாற்றினேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.