இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’.
பள்ளியிலிருந்து பேரிளம் பருவம் வரை தொடரும் நாயகனின் காதலை பல உணர்ச்சிகளுடன் இயக்குநர் பிரேம் குமார் உருவாக்கியிருந்தார்.
அப்படத்தில் இடம்பெற்ற ‘காதலே..காதலே’, ‘லைப் ஆஃப் ராம்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பரவலாக கேட்கப்பட்டு வருகிறது.
6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இது, கார்த்தியின் 27-வது படமாகும்.
இதையும் படிக்க: அஜித் - ஆதிக் படத்தின் பூஜை!
இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘மெய்யழகன்’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஆரண்ய காண்டம் மறுவெளியீட்டுத் தேதி!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி! இந்தியா வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனை!

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு! ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

