பா.இரஞ்சித் அரசியல் பேசினால் என்ன தவறு..?: கீர்த்தி பாண்டியன்

திரைப்படங்களில் அரசியல் பேசுவது பற்றி நடிகை கீர்த்தி பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
பா.இரஞ்சித் அரசியல் பேசினால் என்ன தவறு..?: கீர்த்தி பாண்டியன்

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன், “பா.இரஞ்சித் அண்ணா பெயர் வந்தாலே அரசியல் பேச ஆரம்பித்துவிட்டீர்களா என்றுதான் கேட்கிறார்கள். பேசினால் என்ன தவறு? நம் உடையில், உணவில், குடிநீரில் எல்லாம் அரசியல் இருக்கிறது. அதைப்பற்றி பேசவில்லை என்றால் அது இல்லை என அர்த்தமில்லை. நீங்கள் அதைத் தவிர்க்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். இந்தப் படத்திலும் அரசியல் இருக்கிறது. பா.இரஞ்சித் அண்ணா எடுக்கும் திரைப்படங்கள் முக்கியமானது. இப்படத்தில், என் குரலும் இருப்பதில் பெருமையாக இருக்கிறது” எனக் கூறினார். 

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான ப்ளூஸ்டார் வருகிற ஜன.25 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

நடிகை கீர்த்தி பாண்டியன்.
நடிகை கீர்த்தி பாண்டியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com