மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு! கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி, பொது தரிசனம் எப்போது?காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு; 23,200 ஐ கடந்த நிஃப்டி!!மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

ரசிகர்களின் பேராதரவில் ப்ளூ ஸ்டார்! 

நடிகர் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 

Published On :


இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

Story image

இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

அடுத்து வெளியான இரண்டாவது பாடலான ‘அரக்கோணம் ஸ்டைல்’ என்கிற பாடலும் ஹிட்டடித்து. கோவிந்த் வசந்தா இசையில் அறிவு பாடிய இப்பாடல் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில், படம் இன்று (ஜன. 25) வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. நடிகர் அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் பதிவினை ரீபோஸ்ட் செய்து வருகிறார். 

Story image

அசோக் செல்வன், சாந்தனு தவிர்த்து பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.