எதிர்நீச்சல் தொடரில் முக்கிய பாத்திரமாக இருந்து வந்த மாரிமுத்து மறைவுக்கு பின்பு, இந்த தொடரின் டிஆர்பி குறைந்த நிலையில், தற்போது டிஆர்பியில் 3-வது இடத்திற்கு எதிர்நீச்சல் தொடர் முன்னேறியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 10 தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.
சன் டிவியின் புதிய சீரியலான சிங்கப் பெண்ணே தொடர் 11.02 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கயல் சீரியல் 10.28 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
எதிர் நீச்சல் தொடர் 9.19 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு முன்னெறியுள்ளது.
வானத்தைப் போல சீரியல் 8.95 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
சுந்தரி சீரியல் 8.76 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 8.49 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
இனியா தொடர் 7.24 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 7-வது இடத்தில் உள்ளது.
பாக்கியலட்சுமி தொடர் தொடர் 6.89 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.
ஆனந்த ராகம்தொடர் 6.22 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. ஆஹா கல்யாணம் தொடர் 5.85 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: தனுஷ் தயாரிப்பில் 3 படங்கள்!
எப்போதும் போல சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 5 இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.