த்ரிஷாவிடமிருந்து விஜய் விலகி சங்கீதாவுடன் இணையவேண்டும்: பாடகி சுசித்ரா!

பாடகி சுசித்ரா நடிகர் விஜய் குறித்து பேசும் விடியோ வெளியிட்டுள்ளார்
த்ரிஷாவிடமிருந்து விஜய் விலகி சங்கீதாவுடன் இணையவேண்டும்: பாடகி சுசித்ரா!

பாடகி சுசித்ரா நடிகரும் தவெக தலைவருமான விஜய் குறித்து பேசும் விடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22ஆம் தேதியில் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தனர். அதே நாளில் நடிகை த்ரிஷாவும் நடிகர் விஜய்யுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், த்ரிஷா பதிவிட்ட விஜய் உடனான புகைப்படத்தினை மேற்கோள் காட்டி, பாடகி சுசித்ரா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ``நடிகர் விஜய் த்ரிஷாவிடமிருந்து விலகி, அவருடைய மனைவி சங்கீதாவுடன் மீண்டும் ஒன்றுசேர வேண்டும். த்ரிஷா, விஜய்யின் பிறந்தநாளில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்தார். இதன்மூலம் த்ரிஷா விஜய்யுடன் இணைய விரும்புவதாகத் தெரிகிறது. ஏனெனில், நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ளதன் மூலம் த்ரிஷாவும் அரசியலில் நுழைய விரும்புகிறார்.

அதாவது, ஜெயலலிதா எம்.ஜி.ஆர். மூலம் அரசியலில் நுழைந்து, அரசியல் கலைகளைக் கற்றுக்கொண்டு, பின்னர் எம்.ஜி.ஆரையே முந்த விரும்பினார். த்ரிஷாவும் அவரைப் போலவே இருக்க விரும்புகிறார் போல. ஆகையால், விஜய் த்ரிஷாவை விட்டு விலகி, அவருடைய மனைவி சங்கீதாவுடன் இணையவேண்டும்.

மேலும், பாஜகவில் தான் அழகான பெண்கள் உள்ளனர். த்ரிஷாவும் விஜய்யை விட்டுவிட்டு பாஜகவில் தான் இணையவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவிடமிருந்து விஜய் விலகி சங்கீதாவுடன் இணையவேண்டும்: பாடகி சுசித்ரா!
விண்வெளிக்கு பயணிக்க தயாரா? இந்திய குடிமக்களுக்கு வாய்ப்பளிக்கும் அமெரிக்க நிறுவனம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com