நடிகை சைத்ரா ஆச்சர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டு வருகிறார்.
கன்னடத்தில் உருவான ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை சைத்ரா ஆச்சர். இந்த படம் தமிழில் ‘ஏழு கடல் தாண்டி’ என வெளியானது. இதன் இரண்டாம் பாகமான சப்த சாகரதாச்சே எல்லோ சைட் - பி படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து சைத்ரா பிரபலமானார்.
தொடர்ந்து, இவர் நடித்த டோபி திரைப்படம் வெளியாகி அதிலும் பெரிய கவனத்தை பெற்றார். அவ்வவ்போது, இன்ஸ்டாவில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

தற்போது, நடிகர்கள் சித்தார்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க சைத்ரா ஒப்பந்தமாகியுள்ளார். கன்னட சினிமாவில் அறிமுகமான இரண்டாடிற்குள், தமிழுக்கும் அறிமுகமான நடிகைகளில் ஒருவர் என்கிற பெருமையை சைத்ரா பெற்றுள்ளார்.

சைத்ரா ஆச்சர்.
இவரின் முகமும் கிராமம் மற்றும் நகரங்களுக்கு ஏற்ற சாயலைக் கொண்டிருப்பதால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலரும் சைத்ராவை அணுகி வருவதாகத் தகவல். முதல் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் உருவாகி வருவதால், சைத்ரா தமிழிலும் வெற்றி பெறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
‘சப்த சாகரதாச்சே எல்லோ’ படத்தின் நாயகி ருக்மணி வசந்த்தும் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









