காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஜமா என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது: அம்மு அபிராமி!

ஜமா படத்தின் காட்சியில்..

Published On :

ஜமா திரைப்படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகை அம்மு அபிராமி.

நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். துடுக்கான கதாபாத்திரங்களிலும் அமைதியான தோற்றத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்தவர், அசுரன் படத்தில் கத்தரிப்பூவழகி பாடலின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். தற்போது, ‘ஜமா’ திரைப்படத்திலும் நாயகியாகநடித்துள்ளார்.

இப்படத்தைப் பற்றி நடிகை அம்மு அபிராமி பேசியபோது, "எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது.

இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இசையமைப்பாளர் இளையராஜா சாரின் இசையில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கும். எனக்கு அது ‘நீ இருக்கும் உசரத்துக்கு’ பாடல் மூலம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ஜமா நாயகன் பாரி இளவழகன் மற்றும் அம்மு அபிராமி.

ஜமா நாயகன் பாரி இளவழகன் மற்றும் அம்மு அபிராமி.

’ஜமா’வில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ்.சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே.இளவழகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பரி இளவழகன் இயக்கியுள்ளார். ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். ஜமா ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.