லக்கி பாஸ்கர் பெயர் முன்னோட்ட பாடல்!
'லக்கி பாஸ்கர்' படத்தின் பெயர் முன்னோட்ட பாடல் (டைட்டில் டிராக்) வெளியாகியுள்ளது.


'லக்கி பாஸ்கர்' படத்தின் பெயர் முன்னோட்ட பாடல் (டைட்டில் டிராக்) வெளியாகியுள்ளது.
துல்கர் சல்மானின் நடிப்பில் இறுதியாக வெளியான 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான அவர், பின்னர் அப்படத்திலிருந்து விலகினார்.
இதற்கிடையே, நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. மேலும், இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு லக்கி பாஸ்கர் படத்தின் பெயர் முன்னோட்ட பாடலை (டைட்டில் டிராக் - title track) வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...