6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நடிகை பார்வதியின் புதிய படம்!

பிரபல மலையாள நடிகை பார்வதி நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Published On :

மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை பார்வதிக்கு டேக் ஆஃப் எனும் மலையாளப் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Story image

லீனா மணிமேகலை இயக்கத்தில் சைபர் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் படத்திற்கு ‘தன்யா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை கிராமிய விருது பெற்ற தயாரிப்பாளர் அபூர்வா பக்‌ஷி இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். 2022இல் அறிவிக்கப்பட்டு இன்னும் இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Story image

இந்நிலையில் நடிகை ஊர்வசியுடன் இணைந்து பார்வதி புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு உள்ளொழுக்கு எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை ஆர்எஸ்விபி தயாரிக்க கிரிஸ்டோ டாமி இயக்க சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.