கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

வில்லன் கதாபாத்திரங்களை மக்கள் மதிப்பதில்லை: விஜய் சேதுபதி ஆதங்கம்!

நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரங்களில் ஏன் நடிப்பதில்லை எனக் கூறியுள்ளார்.

Published On :

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 52வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு டிரெயின் எனப் பெயரிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரின் 50-வது படமான மகாராஜா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, பாலிவுட் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். வில்லனாக மாஸ்டர், விக்ரம், ஜவான் படங்களில் கலக்கியிருந்தார்.

Story image

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக அசத்தியிருப்பார். எந்தக் கதாபாத்திரம் எடுத்தாலும் அதில் முத்திரையைப் பதிப்பவராக இருக்கிறார் விஜய் சேதுபதி.

தற்போது 50ஆவது படமான மகாராஜா படம் வெளியாகவிருக்கிறது. இது குறித்த நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பேசியதாவது:

படத்தில் நாயகனைப் போலவே வில்லன் கதாபாத்திரமும் முக்கியமானது. ஆனால் ரசிகர்கள் வில்லன் கதாபாத்திரங்களை மதிப்பதில்லை.

மகாராஜா தற்போது நடித்த படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். கிட்டதட்ட பீட்சா படம்போல சஸ்பென்ஸ் திரில்லராக இருக்கும். இந்தப் படம் வெறுமனே ஒரு முடிதிருத்துபவரின் வாழ்வில் நடக்கும் கதையாக மட்டுமே இது இருக்காது எனவும் கூறினார்.

Story image

ஜூன் 14ஆம் தேதி மகாராஜா திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.