ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

ஆவலை ஏற்படுத்தும் மிஷ்கினின் டிரெயின் சண்டைக் காட்சி மேக்கிங் விடியோ!

டிரெயின் சண்டைக் காட்சி மேக்கிங் விடியோ....

News image
Updated On :28 ஜூலை 2026, 10:31 am IST

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான டிரெயின் திரைப்படத்தின் சண்டைக்காட்சி மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான டிரெயின் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். முழுக்கதையும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஓடும் ரயில் 5 மணி நேரம் நடக்கும் ஆக்‌ஷன் உணர்வுப்பூர்வமான கதையாக இது உருவாகியுள்ளது. இதன் டீசர் நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் தாணு, இப்படத்தை ஆகஸ்ட் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் 2 சண்டைக் காட்சியின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர். ரயில் பெட்டிக்குள் இடுங்களான பகுதிகளில் நடக்கும் மோதல்களும் இயக்குநர் மிஷ்கின் எப்படி நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடிப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மிஷ்கினின் இசையமைப்பும் எடிட்டும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Making-of video of Mysskin's train fight scene that sparks excitement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.