47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதல் சம்பளம் ரூ.1 கோடியை தானம் கொடுத்த மகேஷ் பாபு மகள்!

நடிகர் மகேஷ் பாபுவின் மகள் செய்த செயல் கவனம் ஈர்த்துள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2024, 11:12 am

DIN

நடிகர் மகேஷ் பாபுவின் மகள் செய்த செயல் கவனம் ஈர்த்துள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. தமிழில் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தைப்போல மகேஷ் பாபுவின் திரைப்படங்கள் வெளியாகும்போதும் குடும்பத்துடன் ரசிகர்கள் செல்வார்கள்.

சில மாதங்களுக்கு முன் வெளியான ‘குண்டூர் காரம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றிப்படமானது. முக்கியமாக, அப்படத்தில் இடம்பெற்ற, 'குர்ச்சி மடதபெட்டி’ பாடல் இந்தியளவில் ஹிட் அடித்தது.

மகேஷ் பாபுவுக்கு மகனும், மகளும் உள்ளனர். அதில், மகன் கௌதம் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருவதுடன் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். மகள் சித்தாரா வெளிநாட்டில் படித்து வருகிறார்.

மகளுடன் மகேஷ் பாபு!

மகளுடன் மகேஷ் பாபு!

இந்த நிலையில், சித்தாராவுக்கு ஆடை விளம்பரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அதை ஏற்றுக்கொண்டு நடித்தவருக்கு சம்பளமாக ரூ.1 கோடியை வழங்கியுள்ளனர். ஆனால், அதை தன் சொந்த தேவைக்காக வைத்துக்கொள்ளாமல் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

12 வயதே ஆன மகேஷ் பாபு மகளின் இச்செயலை அறிந்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.