மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கருடன் வசூல் இவ்வளவா?

நடிகர் சூரி நடித்துள்ள கருடன் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியானது.

News image
Updated On :7 ஜூன் 2024, 6:37 am

DIN

நடிகர் சூரி நடித்துள்ள கருடன் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியானது.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் கருடன்.

துரை செந்தில்குமார் இயக்கிய இப்படம், கடந்த வெள்ளிக்கிழமை (மே.31) திரையரங்குகளில் வெளியானது. தேனி மாவட்ட வட்டாரத்தில் நிகழும் கதையாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சூரியின் நடிப்பும் சண்டைக்காட்சிகளும் பேசப்படுகின்றன. யுவன் இசையமைத்த இடைவேளைக் காட்சியின் பின்னணி இசையும் பெரியதாகக் கவனம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் 6 நாளில் ரூ.23 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதியில் மேலும் வசூல் அதிகரிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Story image

முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வரவேற்பு சூரியின் படத்திற்குக் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.