வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

நிச்சயதார்த்தம் முடிந்தது! புகைப்படம் வெளியிட்ட நடிகை சுனைனா!

நடிகை சுனைனா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :7 ஜூன் 2024, 4:29 pm IST

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படங்கள்  நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. 

Story image

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட், இன்ஸ்பெக்டர் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். 

Story image

நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்த ரெஜினா கலவையான விமர்சனங்களையே பெற்றன. 

சமீபத்தில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி இணையத் தொடர் மிகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றன.

சமீபத்தில் காதலரின் கைகள் கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக தற்போது மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் சுனைனா, ”எனது கடைசி பதிவு குறித்து பல கட்டுரைகளை பார்க்க முடிந்தது. அதனால் இதனை தெளிவுப்படுத்துகிறேன். எனக்கு மகிழ்ச்சியாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

எனக்கு அற்புதமான குறுஞ்செய்திகள் மூலம் வாழ்த்துகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அந்த வாழ்த்துகள் மிகவும் பெரிதாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.