மலையாள திரைப்படங்களில் நாயகர்களின் சித்தரிப்பு மாறியிருக்கிறது!

மலையாள திரைப்படங்களில் நாயகர்களின் சித்தரிப்பு மாறியிருக்கிறது!

ஆவேஷம் பட நடிகை பூஜா மோகன்ராஜ் மலையாள சினிமாவை புகழ்ந்துபேசியுள்ளார்.
Published on

ரோமாஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த படம் ஆவேஷம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஃபஹத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது.

இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றது. குறிப்பாக, இலுமினாட்டி பாடலின் இசையும் வரிகளும் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை தாண்டியுள்ளது.

மலையாள திரைப்படங்களில் நாயகர்களின் சித்தரிப்பு மாறியிருக்கிறது!
வில்லன் கதாபாத்திரங்களை மக்கள் மதிப்பதில்லை: விஜய் சேதுபதி ஆதங்கம்!

ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த ஆவேஷம் பட நடிகை பூஜா மோகன்ராஜ் கூறியதாவது:

மஞ்ஞுமெல் பாய்ஸ், பிரம்மயுகம், ஆவேஷம் படங்களின் வெற்றியினால் அதனைக் குறைகூறும் பொருட்டு மலையாள சினிமாக்களில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

மலையாள சினிமாக்களில் நாயகர்களின் வழக்கமான சித்தரிப்புகள் இல்லை. அதெல்லாம் மாறியிருக்கிறது. மேலே சொன்ன படங்கள் எல்லாமே ஆண்களின் குறைகளைப் பேசுகிறது. மிகவும் உயர்வான இடங்களில் நாயகர்கள் இல்லை. அவர்கள் பொறுமை இழந்து காண்கிறார்கள். இது நச்சுத்தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபாடானது.

மலையாள திரைப்படங்களில் நாயகர்களின் சித்தரிப்பு மாறியிருக்கிறது!
வணிக வெற்றிகள் அழிவை நோக்கியே செல்லும்: ஹிந்தி சினிமாக்களை விமர்சித்த அனுராக் காஷ்யப்!

ஆவேஷம் படத்திலும் ரங்கா கதாபாத்திரம் கொடிய ஆல்ஃபா ஆணாக இருக்க விரும்பினாலும் அவனுள் நடக்கும் நிறைய அழுத்தங்கள், மாற்றங்கள் அவன் நினைத்ததுபோல் மாற்றுவதில்லை. அவரது எல்லா கொடுமைகளுக்குப் பிறகும் நேசிக்க வேண்டுமென நினைக்கிறார். அதனால்தான் சொல்கிறேன் மலையாள சினிமாக்களில் நாயகர்களின் சித்தரிப்பு மாறியிருக்கிறது.

மேலும் பிரேமலு படத்தில் நஸ்லேன், மஞ்ஞுமெல் பாய்ஸ் படத்திலும் ஆண்களின் பலவீனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தப் படங்களின் வலிமையான ஆண் எல்லாப் பிரச்னைகளையும் தீர்ப்பதுபோல காண்பிக்கப்படவில்லை. நாயகர்களின் பலவீனங்கள் மலையாள சினிமாக்களில் சுவாரசியமான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com