
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட்/செப்டம்பர் மாதத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘எஸ்கே 23’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்தா நடிக்கிறார்.
துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் இணைந்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஷபீரும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுவரை நடிக்காத மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தாடியை வளர்த்துள்ளதாகவும் பல தோற்றங்களிலும் வருவாரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
14 வருடங்களுக்குப் பிறகு பிஜூ மேனன் தமிழில் இந்தப் படத்தில் மீண்டும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் புதிய தோற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.