மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் எப்போது?

லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2024, 10:05 am

DIN

'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மானின் நடிப்பில் இறுதியாக வெளியான 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான அவர், பின்னர் அப்படத்திலிருந்து விலகினார்.

இதற்கிடையே, நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

Story image

லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. மேலும், இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று(ஜூன் 17) வெளியாகவுள்ளதாகவும், முழு பாடல் ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.