தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேட்ட ராப் படத்தின் டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி!

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிடவிருக்கிறார்.

News image

பேட்ட ராப் படத்தின் போஸ்டர்

Updated On :21 ஜூன் 2024, 8:22 am

DIN

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிடவிருக்கிறார்.

நடன இயக்குநராக இருந்து நடிகராக, இயக்குநராக என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வந்தவர் பிரபு தேவா. சமீப காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

994இல் காதலன் படத்தில் இருந்து இயக்குநர் ஷங்கர் எழுதிய பேட்ட ராப் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலின் தலைப்பில் பிரபு தேவா புதிய படத்தில் நடத்தியுள்ளார்.


இந்நிலையில் அவர் நடித்துள்ள பேட்ட ராப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. ப்ளூ ஹில் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபு தேவாவுடன் நடிகை வேதிகா நடித்துள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வெளியீடு குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் பேட்ட ராப் படத்தின் டீசரை விஜய் சேதுபதி நாளை (ஜூன் 22) காலை 11 மணிக்கு வெளியிடவிருக்கிறார்.

விஜய் சேதுபதி வெளியிடும் டீசர்.

விஜய் சேதுபதி வெளியிடும் டீசர்.

பிரபு தேவா ஏ.ஆர். ரஹ்மான் 6ஆவது முறையாக இணையும் மூன் வாக் படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.