ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா திருமணம்!

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தன் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :25 ஜூன் 2024, 9:35 am

DIN


நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தன் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் டபாங் படத்தின் மூலம் 2010-ல் நாயகியாக அறிமுகமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். ஹிந்தியில் பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

தொடர்ந்து, சில தோல்விப் படங்களை அடுத்தடுத்து கொடுத்ததால், ரசிகர்களின் தேடுதலில் இருந்து சோனாக்‌ஷி காணாமல் போனார். ஆனாலும், முன்னணி இயக்குநர்களின் தேர்வு பட்டியலில் இன்றும் இருக்கிறார்.

Story image

இறுதியாக, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி எனும் இணையத்தொடரில் வில்லியாக நடித்திருந்தார். தற்போது, இரு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், 37-வயதாகும் சோனாக்‌ஷி சின்ஹா தன் காதலரான நடிகர் ஜாகீர் இக்பாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவுத்திருமணம் செய்தார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Story image

டபுள் எக்ஸ்எல் (Double XL) திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.