தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

விடாமுயற்சி படத்தின் முதல் போஸ்டர்!

விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image

விடாமுயற்சி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்

Updated On :30 ஜூன் 2024, 1:56 pm

விடாமுயற்சி படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை (ஃபர்ஸ்ட் லுக்) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூன் 30) வெளியிட்டனர்.

இதற்கு முன்பு 'விடாமுயற்சி' என்ற டைட்டில் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், படத்தில் அஜித் குமாரின் முதல் தோற்றப் போஸ்டர் தற்போது வெளியானது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் மகிழ்த்திருமேனி இயக்கிவருகிறார். தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அஜித் குமாரை இவர் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித் குமாருடன் நடிகர் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் சண்டைக் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற விடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.