நடிகை வரலட்சுமிக்கு திருமண நிச்சயம்!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையில் திருமண நிச்சயம் நிகழ்ந்துள்ளது.
நடிகை வரலட்சுமிக்கு திருமண நிச்சயம்!
DOTCOM
Published on
Updated on
1 min read

போடா போடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

நடிகர் சரத்குமாரின் மகளான இவருக்கு சினிமாவில் நாயகியாக பெரிய இடம் கிடைக்கவில்லையென்றாலும் கம்பீரமான வில்லி கதாபாத்திரங்கள் அமைந்து வருகின்றன. இறுதியாக , இவர் நடித்த மைக்கல், யசோதா, ஹனுமன் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், நடிகை வரலட்சுமிக்கும் ஓவியம் மற்றும் கலைப்பொருள்களை விற்பனை செய்து வரும் தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் நேற்று (மார்ச்.1) திருமண நிச்சயம் நிகழ்ந்துள்ளது.

இந்த நிச்சயம் இருவீட்டார் சம்மத்துடன் நிகழ்ந்துள்ளது. இதனால், விரைவில் தன் 14 ஆண்டுகால நண்பரான நிகோலய் சச்தேவைத் திருமணம் செய்கிறார் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமிக்கு திருமண நிச்சயம்!
‘கண்மணி அன்போடு காதலன்..’ பாடலை இசையமைக்க இளையராஜாவுக்கு எவ்வளவு நேரமானது தெரியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com