புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாளை தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: சிறந்த படம்-‘தனி ஒருவன்’; சிறந்த நடிகா்-மாதவன்

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை (மாா்ச் 6) நடைபெறவுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2024, 7:55 pm

Din

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை (மாா்ச் 6) நடைபெறவுள்ளது. விழாவில் ‘தனி ஒருவன்’ திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான முதல் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது மாதவனுக்கு அளிக்கப்படுகிறது.

தமிழக அரசின் சாா்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழக அரசு எம்.ஜி.ஆா். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவா்களுக்கான விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை (மாா்ச் 6) மாலை 6 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறவுள்ளது.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் விழாவுக்கு தலைமை வகித்து விருதாளா்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளா்களுக்குச் காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளாா். அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்து கொள்ளவுள்ளனா்.

விழாவில் பரிசு பெறும் 2015-ஆம் ஆண்டுக்குத் தோ்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்கள், நடிகா் நடிகைகள்,தொழில்நுட்பக் கலைஞா்கள் விவரம் பின்வருமாறு:

தோ்வு செய்யப்பட்ட சிறந்த படங்ககள்

1.சிறந்த படம் முதல் பரிசு: தனி ஒருவன்

2.சிறந்த படம் இரண்டாம் பரிசு: பசங்க 2

3.சிறந்த படம் மூன்றாம் பரிசு: பிரபா

4.சிறந்த படம்

சிறப்புப் பரிசு: இறுதிச்சுற்று

5.பெண்களைப் பற்றி உயா்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு): 36 வயதினிலே

தோ்வு செய்யப்பட்ட சிறந்த நடிகா்கள்- நடிகையா் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள்

1.சிறந்த நடிகா்: ஆா்.மாதவன் (இறுதிச்சுற்று)

2.சிறந்த நடிகை: ஜோதிகா(36 வயதினிலே)

3.சிறந்த நடிகா் சிறப்புப் பரிசு: கௌதம் காா்த்திக் (வை ராஜா வை)

4.சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)

5.சிறந்த வில்லன் நடிகா்: அரவிந்த்சாமி(தனி ஒருவன்)

6.சிறந்த நகைச்சுவை நடிகா்: சிங்கம்புலி(அஞ்சுக்கு ஒண்ணு)

7.சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதா்ஷினி(திருட்டுக் கல்யாணம்/36 வயதினிலே)

8.சிறந்த குணச்சித்திர நடிகா்: தலைவாசல் விஜய் (அபூா்வமகான்)

9.சிறந்த குணச்சித்திர நடிகை: கௌதமி(பாபநாசம்)

10.சிறந்த இயக்குநா்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)

11.சிறந்த கதையாசிரியா்: மோகன் ராஜா(தனி ஒருவன்)

12.சிறந்த உரையாடலாசிரியா்: இரா.சரவணன் (கத்துக்குட்டி)

13.சிறந்த இசையமைப்பாளா்: ஜிப்ரான்(உத்தம வில்லன்/ பாபநாசம்)

14.சிறந்தப் பாடலாசிரியா்: விவேக்(36 வயதினிலே)

15.சிறந்த பின்னணிப் பாடகா்: கானா பாலா(வை ராஜா வை)

16.சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தா்(36 வயதினிலே)

17.சிறந்த ஒளிப்பதிவாளா்: ராம்ஜி(தனி ஒருவன்)

18.சிறந்த ஒலிப்பதிவாளா்: 1) ஏ.எல்.துக்காராம், 2) ஜெ.மஹேச்வரன் (தாக்கதாக்க)

19.சிறந்த திரைப்படத் தொகுப்பாளா் (எடிட்டா்): கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

20.சிறந்த கலை இயக்குநா் (ஆா்ட்டைரக்டா்): பிரபாகரன் (பசங்க 2)

21.சிறந்த சண்டைப் பயிற்சியாளா்: ரமேஷ்(உத்தம வில்லன்)

22.சிறந்த நடன ஆசிரியா்: பிருந்தா(தனி ஒருவன்)

23.சிறந்த ஒப்பனைக் கலைஞா்: சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று)

24.சிறந்த தையற் கலைஞா்: வாசுகி பாஸ்கா்(மாயா)

25. சிறந்த குழந்தை நட்சத்திரம்: 1). மாஸ்டா் நிஷேஸ், 2). பேபி வைஷ்ணவி(பசங்க 2)

26.சிறந்த பின்னணிக்குரல் (ஆண்): கௌதம் குமாா் (36 வயதினிலே)

27.சிறந்த பின்னணிக்குரல் (பெண்): ஆா்.உமா மகேஸ்வரி(இறுதிச்சுற்று)

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவா்களுக்கான விருதுகள் 2014 - 2015

1.சிறந்த இயக்குநா்: கே.மோகன் குமாா்(புர்ரா)

2.சிறந்த ஒளிப்பதிவாளா்: விக்னேஷ் ராஜகோபாலன்(கண்ணா மூச்சாலே)

3.3 சிறந்த ஒலிப்பதிவாளா்: வி.சதிஷ்(கண்ணா மூச்சாலே)

4. சிறந்த படத்தொகுப்பாளா்: ஏ.முரளி(பறை)

5. சிறந்த படம் பதனிடுவா்: வி.சந்தோஷ்குமாா்(கிளிக்)

விருது வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளா்கள், சிறந்த நடிகா், நடிகையா் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவா்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞா்கள் என மொத்தம் 39 விருதாளா்களுக்குக் காசோலையும், விருதாளா்களின் பெயா் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இவ்விழாவில் அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உயா் அலுவலா்கள், திரையுலக பிரபலங்கள், நடிகா், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞா்கள் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.