சௌதி அரேபியாவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர்!

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் சௌதி அரேபியா சென்றுள்ளார்கள்.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர்.
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர்.படங்கள்: இன்ஸ்டாகிராம், ஐஏஎன்எஸ்.

நயன்தாராவின் பதிவினால் விக்னேஷ் சிவன் உடன் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் தீயாக தகவல் பரவியது.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் 1140 கோடி வசூலித்தது. 

தொடர்ந்து, அன்னபூரணி திரைப்படமும் சமீபத்தில் வெளியாகியது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர்.
நடிகர் அஜித் குமார் நலமுடன் வீடு திரும்பினார்!

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர்.

அவர்களது குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரிட்டுள்ளார்கள். 

நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பதிவால் சர்சை எழுந்தது. நான் தொலைந்து விட்டேன் என்ற பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். முன்னதாக இன்ஸ்டாவில் பின் தொடர்வதை நிறுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர்.
வயதாக வயதாக அழகில் மெருகேறும் நயன்: விக்னேஷ் சிவன் பெருமிதம்!

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள கணக்கில் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு, "நீண்ட நாள்களுக்குப் பிறகு எங்களது ஆண்களுடன் ஒரு பயணம்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

சௌதி அரேபியாவில் நடைபெறும் கிராண்ட் பிரிக்ஸ் என்பது ஃபார்முலா ஒன் மோட்டார் பந்தய நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார்கள்.

Dotcom

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com