'தங்கமே...' மீனாட்சி பொண்ணுங்க நடிகைக்கு குவியும் பாராட்டு!

'தங்கமே...' மீனாட்சி பொண்ணுங்க நடிகைக்கு குவியும் பாராட்டு!

செளந்தர்யா நடித்த தெலுங்கு மொழித் தொடர் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது.
Published on

நடிகை செளந்தர்யா வெளியிட்டுள்ள படத்துக்கு அவரின் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

செளந்தர்யாவின் ரசிகர்கள் பல பக்கங்களை உருவாக்கி அதில் அவரின் படங்களைப் பகிர்ந்து செளந்தர்யாவை டேக் செய்து வருகின்றனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை செளந்தர்யா ரெட்டி. அவருக்கு ஜோடியாக நடிகர் ஆர்யன் நடித்து வருகிறார்.

கணவனால் ஏமாற்றப்பட்ட மீனாட்சி (தாய்), தனது 4 மகள்களையும் வளர்த்து சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வைக்கப் போராடுகிறார். அதற்கு 4 மகள்களும் துணைபுரிந்து பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இதுவே மீனாட்சி பொண்ணுங்க தொடரின் மையக்கதை.

'தங்கமே...' மீனாட்சி பொண்ணுங்க நடிகைக்கு குவியும் பாராட்டு!
ஈரமான ரோஜாவே நாயகனின் புதிய தொடர்! ஜோடி இவர்தான்!
நடிகை செளந்தர்யா - ஆர்யன்
நடிகை செளந்தர்யா - ஆர்யன்

இந்தத் தொடரில் நடிகை அர்ச்சனா தாயாக நடித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீ ரஞ்சனி நடித்து வருகிறார்.

இந்தத் தொடரில் இரண்டாவது மகளாக வரும் சக்தி பாத்திரத்தில் நடிகை செளந்தர்யா ரெட்டி நடித்து வருகிறார். கன்னட தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த தெலுங்கு மொழித் தொடர் மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது.

'தங்கமே...' மீனாட்சி பொண்ணுங்க நடிகைக்கு குவியும் பாராட்டு!
ரசிகர்கள் வெள்ளத்தில் சீரியல் நடிகை அனுஷா!

தற்போது தமிழில் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வருகிறார். இவர் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்.

அவ்வபோது படங்களையும் விடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருவது இவரின் வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் உணவகத்திற்குச் சென்று அங்கு ஐஸ்கிரீம் உண்ணும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த படத்தை அவரின் ரசிகர்கள் பலர் தங்களின் பக்கங்களில் பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com