‘சொந்த வீட்டுக்கு வந்தது போலிருக்கிறது’- ஆடு ஜீவிதம் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆடு ஜீவிதம் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
‘சொந்த வீட்டுக்கு வந்தது போலிருக்கிறது’- ஆடு ஜீவிதம் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான்!

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக்கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு.

2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஆடு ஜீவிதம் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான பேசியதாவது:

சினிமா, நல்ல விசயம், கதைகள், மனிதநேயம் போன்றவற்றை நம்பும் பிளெஸ்ஸி மாதிரி ஆர்வம் மிகுந்த இயக்குநருடன் வேலை செய்வது மிகவும் மரியாதைக்குரியது. அவருடன் வேலை செய்வதில் இருந்து பல விசயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். அவர் மிகவும் பொறுமையான மனிதர். இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு நன்றி. இந்தப் படம் நம்முடைய பலபேரின் கதையைப் பற்றியது. நாமும் ஏதோ ஒரு வகையில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். சில மனிதர்களுக்கு மனச்சிக்கல் இருக்கும் அதுபோல இந்தப் படத்தில் ஒருவர் பாலைவனத்தில் மாட்டிக்கொள்கிறார். இருந்தும் இந்தக் கதையை, பல மனிதர்கள் தங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

மீண்டும் மலையாளப் படத்தில் இணைவது எனக்கு சொந்த வீட்டிக்கு வந்தது போல் இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு சிறந்த படத்தின் மூலம் வருவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தப் பயணம் மிகவும் சுவாரசியமானது எனப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com