பிரேமலு ஓடிடியில் எப்போது?

பிரேமலு படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரேமலு ஓடிடியில் எப்போது?

நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரேமலு. தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரேமலு ஓடிடியில் எப்போது?
அதிகம் வசூலித்த முதல் மலையாளப் படம்.. மஞ்ஞுமல் பாய்ஸ் சாதனை!

சமீபத்தில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட இப்படம் விரைவில் தமிழிலும் வெளியாக உள்ளது.  இப்படத்தின் தமிழ் டிரைலரும் முன்னதாக வெளியானது.

இந்த நிலையில், பிரேமலு திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com