பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சத்யா ரீமேக்கில் அசோக் செல்வன்?

நடிகர் கமல்ஹாசனின் சத்யா படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2024, 5:56 am

DIN

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான போர் தொழில் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.

தொடர்ந்து, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ படமும் வெற்றியடைந்ததால் அசோக் செல்வன் நிதானமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது, இக்கூட்டணி 1988-ல் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த சத்யா படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய சத்யா வசூலிலும் வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.